திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூரில் உள்ள தங்கராஜா திரையரங்கில் மேலாளராக பணியாற்றுபவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 30). தியேட்டரில் அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த பொழுது படம் பார்ப்பதற்காக வந்த குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (32), துளசிராஜன் (29), ஆகிய இருவரும் மேலாளரிடம் நாங்கள் படம் பார்க்க வேண்டும் கேட்டை திறந்து விடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கு மேலாளாரோ பாதி படம் ஓடிவிட்டது அதனால் இப்பொழுது திறக்க முடியாது அடுத்த ஷோவுக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் தியேட்டர் மேலாளரை ஏன்டா எங்களுக்கே படம் பார்க்க அனுமதி இல்லையா. என்று கூறி மேலாளரை தாக்கியுள்ளனர். இதனை அடுத்து மேலாளர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த அங்கமுத்து இருவரையும் கைது செய்தார்.