வேடசந்தூர்: 451 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

64பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 451 பேருக்கு வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 173 பேருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 278 பேருக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்பாபு, வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, வேடசந்தூர் திமுக பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மருதபிள்ளை, திமுக தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கவிதாமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதிமாரிமுத்து, வேடசந்தூர் பேரூராட்சி துணை தலைவர் சாகுல்ஹமீது, எரியோடு திமுக பேரூர் செயலாளர் சின்னா என்ற செந்தில்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பொன்ராம், திமுக தலைமை கழக பேச்சாளர் முருகவேல், வேடசந்தூர் முன்னாள் தெற்கு ஒன்றிய பொருளாளர் நாகப்பன், வேடசந்தூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நிஜாமுதீன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துச்செல்வி, துணைத் தலைவர் மைதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி