திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே வேங்கனூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49) விவசாயி.
இவர் தனது தோட்டத்தில் ஆடு மற்றும் விலை உயர்ந்த கோழிகளை வைத்து பராமரித்து வருகிறார்.
விலை உயர்ந்த கோழிகளை வளர்த்து விற்பனை செய்வதே பிரதான தொழிலாகவும் வைத்துள்ளார்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை 10: 30 மணி அளவில் தனது தோட்டத்து செட்டில் இருந்த பதினைந்து கோழிகள் மற்றும் 20 கோழிக் குஞ்சுகள் மற்றும் பத்தாயிரம் மதிப்பிலான ஒரு ஆடு மற்றும் ஒரு ஆட்டுக்குட்டியை வெறி நாய்கள் கடித்து குதறின
ஆடு மற்றும் கோழிகளின் அலறல் சத்தம் கேட்ட சக்திவேல் தோட்டத்திற்கு ஓடி சென்று பார்க்கும் போது அனைத்து கோழிகளும் ஆங்காங்கே செத்து கிடந்தது ஆடு மற்றும் ஆட்டுக்குட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்ட சக்திவேல் அதிர்ச்சியடைந்தார்.
பின்பு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆடு மற்றும் குட்டியை அய்யலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
மேலும் கடந்த வாரம் சக்திவேலின் பேத்தி ரோகிதா (வயது 5) என்ற பள்ளி குழந்தையை வெறிநாய்கள் கடித்து சிகிச்சை பெற்றது தெரியவந்தது.
அய்யலூர் பேரூராட்சி நிர்வாகம் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.