வட்டார கல்வி அலுவலகம் முற்றுகை

551பார்த்தது
வட்டார கல்வி அலுவலகம் முற்றுகை
வேடசந்துார் ஒன்றியத்தில் பணிபுரியும் தொடக்கக்கல்வி ஆசிரியைக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல், அவருக்கு அடுத்துள்ள இருவருக்கு பதவி உயர்வு, இடம் மாறுதல் வழங்கியதால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார கல்வி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். வேடசந்துார் ஒன்றியம் கருக்காம்பட்டி அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வி. 2017 முதல் வட்டார அளவில் சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமையில் இருக்கிறார். தகுதி தேர்வின் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு முத்துச்செல்விக்கு அடுத்துள்ள 2, 3-வது நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முறைகேடான பதவி உயர்வை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் வட்டார கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்.

தொடர்புடைய செய்தி