பொய் பேசும் மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேட உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 2014 மக்களவை தேர்தலில் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்காகத் தான் தற்போது பரிகாரம் செய்ய உள்ளேன். மோடி எப்படிப்பட்ட பொய்யராக மாறியிருக்கிறார். பதவிக்கு வந்த 15 நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் திரும்பக் கொண்டு வருவேன் என்று கூறியதே அதற்கு உதாரணம்" என்று தெரிவித்துள்ளார்.