சில நேரங்களில் நாம் சிறுநீர் கழிக்க்கும் போது, வலி அல்லது எரியும் உணர்வு ஏற்படலாம். இதை நாம் சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம். பின்னாளில் அது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற சில நோய்த்தொற்றுகள் இருந்தால் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும். இவை சிறுநீர் குழாயில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வலி உணர்வு வருகிறது. சிறுநீர்ப்பையில் அழற்சி, தொற்று இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி உணர்வு ஏற்படலாம்.