ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.