விதிகளை மீறி நுழையும் தனியார் பேருந்து

563பார்த்தது
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தினம்தோறும் பயணிகள் பயணிக்கும் பேருந்து கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு வத்தலகுண்டில் இருந்து மீண்டும் கொடைக்கானல், கிளவரை பூம்பாறை, போலூர், கவுன்சி போன்ற கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் செல்வது வழக்கமாக உள்ளது.

இதில் கொடைக்கானல் மலைச்சாலையில் வெள்ளி நீர் வீழ்ச்சியில் சுங்கச்சாவடி அமைத்து நுழைவு கட்டணம் கொடைக்கானல் நகராட்சியால் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தனியார் பேருந்து மட்டும் விதிகளை மீறி நுழைவு கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது. கொடைக்கானலுக்கு காலை 8: 15 மணிக்கு இந்த தனியார் பேருந்து வரும். மீண்டும் மதியம் ஒரு மணி அளவில் மீண்டும் வத்தலகுண்டுக்கு செல்லும் இந்த தனியார் பேருந்து விதிகளை மீறி டோல்கேட்டில் வாகனங்கள் கீழே இறங்கும் பாதையில் சாலையில் வருவதும் போவதுமாக வழக்கமாகக் கொண்டுள்ளது.

one way சாலையில் எதிரே ஆம்புலன்ஸ் வாகனம் வந்தாலும் சாலையில் இடம் ஒதுக்கி கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது கொடைக்கானல் நகராட்சி இரண்டு கட்டணம் வசூலிக்கும் சாவடி ஏற்படுத்திக் கொண்டதன் பிறகும் இப்படிப்பட்ட சம்பவம் அரங்கேற்றி வருகிறது.

தொடர்புடைய செய்தி