மாணவர்களுக்கு ஆதார் ஆதார் மையம் துவக்கம்

59பார்த்தது
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலமாக இலவச நோட்டு புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், இலவச பேருந்து என மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் மையம் துவக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆதார் பதிவு திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. பழனியை அடுத்த தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார வள மையத்தில் துவங்கப்பட்ட பயிலும் இடத்திலேயே ஆதார் நிகழ்ச்சிக்கு தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர் சத்திய புவனா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார். வட்டார பொறுப்பு அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக மாணவர்கள் ஆதார் மையங்களுக்கு சென்று காத்திருக்கும் நிலை தயாரிக்கப்பட்டு பள்ளியிலேயே எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதார் பதிவு மையம் ஒவ்வொரு பள்ளிகளிலும் கொண்டு செல்லப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி