

கொடைக்கானல்: 62 ஆவது கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62வது மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த வாரம் 24.05.2023 அன்று தொடங்கப்பட்டது. கோடை விழாவை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று ஏழாவது நாளாக பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயர்ரக நாய்கள் சைபிரியன் ஹஸ்கி, ஜெர்மன் ஷெப்பர்ட், இந்தியன் ஸ்பிட்ஸ், கோல்டன் ரெட்ரீவர், ஸ்பானிஷ் மாஸ்டிஃப், ராஜபாளையம், ராட்வைலர், சிற்றுநாய், பெல்ஜியம் மலைநாய், அமெரிக்கன் புல்லி டொக்ஸ், கலந்து கொண்டன. இதில் கலந்துகொண்ட நாய்கள் 4 பிரிவுகளில் கீழ் விளையாடு போட்டிகளில் நடைபெற்றது. நாய்கள் கண்காட்சியில் முதல் 3 இடத்தை பிடித்த நாய்களுக்கு மண்டல இயக்குனர் கால்நடைத்துறை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.