நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போக்கை மாற்றியமைக்க மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் பள்ளி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்தப் போக்கை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.