ஒட்டன்சத்திரம் - Oddanchatram

தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் தாமதம்

தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் தாமதம்

ஒ‌ட்டன்சத்திரம் பரப்பலாறு அணை மற்றும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் விருப்பாச்சி தலையூத்து அருவியை சுற்றுலா தலங்களாக்க ரூ. 8. 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், 2 ஆண்டுகளாக எந்தப் பணிகளும் தொடங்கப்படாமல் கிடப்பில் இருப்பதால் சுற்று வட்டார மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இயற்கை வளம் நிறைந்து கிடக்கும் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில், கடந்த 2023 ஜூனில் பரப்பலாறு அணை மற்றும் விருப்பாச்சி தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டது. மேலும், முதல் கட்டமாக ரூ. 4. 11 கோடி, 2-ம் கட்டமாக ரூ. 2. 90 கோடி, 3-ம் கட்டமாக ரூ. 1. 20 கோடி என மொத்தம் ரூ. 8. 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை 3 ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிட்டனர். கடந்த 22 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இத்திட்டம் வருமா, வராதா என்று மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலங்களாக்கி, அருவியை கண்டு ரசிப்பதற்கும், பாதுகாப்பாக குளிப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது சுற்றுவட்டார மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా