கொடைக்கானல்: கடந்த இரண்டு மணி நேரமாக கனமழை
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கடந்த இரண்டு மணி நேரமாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானல் அதனை சுற்றி உள்ள மேல் மலை கிராமங்கள் கிளாவரை மன்னவனூர் கூகால் பூம்பாறை மற்றும் கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு வட கவுஞ்சி தாண்டிக்குடி பேத்துப்பாறை போன்ற பகுதியில் இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது 1 மணிமுதல் 4 மணி வரை மிக கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகர் பகுதியான நாயுடுபுரம் அண்ணா சாலை மூஞ்சிகல் உகார்நகர் சீனிவாசபுரம் ஆகிய முக்கிய பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.