மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சாலை ஓரமாக தேநீர் அருந்திக் கொண்டிருந்த மாணவர்கள் உள்பட 12 பேர் மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில் ஒரு சிறுமி மற்றும் 4 பேருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணையில், குடிபோதையில் இருந்த ஓட்டுநர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, மாணவர்கள் தேநீர் அருந்த கூடியிருந்த கடைக்குள் வேகமாக நுழைந்தது தெரியவந்துள்ளது.