கோபால் நாயக்கர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில், அவர்களின் 223-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது திருவுருச்சிலைக்கு அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது: -

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சியை 40 ஆண்டுகள் ஆட்சி செய்து வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப் பெரிய விடுதலைப் பேராட்ட வீரர் குப்பளப் பாட்சா என்று திப்புசுல்தானாலும், கோபால் நாயக்கர் என்று மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் திருமலை குப்பளசின்னப்ப நாயக்கர். விருப்பாட்சியைச் சுற்றிலும் தன்னுடைய உறவினர்களை கொண்டு பல ஊர்களை உருவாக்கி ஆண்டு வந்தார்.

நாட்டின் விடுதலைக்காக கடந்த 05. 09. 1801-ஆம் ஆண்டு உயிர் தியாகம் செய்த கோபால் நாயக்கர் அவர்களின் நினைவு தினம்(செப்டம்பர் 5-ஆம் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, விருப்பாட்சியில், விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் நினைவு தினமான இன்று(செப்டம்பர் 5) அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி