அதிநவீன ரோப் ரைடர் இயந்திரம் அறிமுகம்

613பார்த்தது
கொடைக்கானலில் நேற்று தீயணைப்பு துறையினர் மேற்கு மண்டல இணை இயக்குனர் உத்தரவின்படி திண்டுக்களில் இருந்து கொண்டுவர பட்ட அதிநவீன ரோப் ரைடர் இயந்திரதின் மூலம் மூன்று மாடிக் கட்டிடத்திற்கு மேல் தீ விபத்துகள் ஏற்படும் நேரத்தில் மீட்பு பணிக்கு பயன்படுத்த புதிய ரோப் ரைடர் என்ற இயந்திரத்தை கொடைக்கானல் டிப்போ பகுதியில் உள்ள பழைய சிவப்பிரியா ஹோட்டலில் வைத்து புதன்கிழமை மாலை 6: 00 மணி அளவில் செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சி கொடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் , கொடைக்கானல் நிலை அலுவலர் சக்திவேல் அவர்கள் முன்னிலையில் கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ரோப் ரைடர் இயந்திரத்தின் மூலம் மூன்று மாடி கட்டிடத்தில் மேல் ஏறி இறங்கியும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த இயந்திரத்தின் உதவியுடன் செங்குத்து மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது மேலும் நவீன ரோப் ரைடர் கருவியானது ஆயிரம் அடி உயரத்திற்கு ஏறவும் இறங்கவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவியை கொடைக்கானலுக்கு அறிமுகம் செய்தனர். அனைத்து அலுவலர்களையும் கொடைக்கானல் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி