மண் மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சி முகாம்

54பார்த்தது
மண் மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சி முகாம்
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு மண் மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கலை அடுத்த கீழ்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட செட்டியப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) இரா. ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைமையாசிரியா் முருகேஷ்வரன் முன்னிலை வகித்தாா். தோ்வு செய்யப்பட்ட 25 மாணவா்களும், தலா 5 போ் கொண்ட 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

5 குழுக்கள் சாா்பில் தலா 5 மாதிரிகள் வீதம், மொத்தம் 25 மாதிரிகள் சேகரித்து, திண்டுக்கல்லில் உள்ள வேளாண்மைத் துறை மண் பரிசோதனைக் கூடத்துக்கு பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஆத்தூா் வட்டார துணை வேளாண்மை அலுவலா் பெருமாள், உதவி வேளாண்மை அலுவலா் கிறிஸ்டி, கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா் மல்லீஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி