மோசடியாக பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளர் கைது

69பார்த்தது
மோசடியாக பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளர் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த எம். வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மு. தங்கராஜன். சேவுகம்பட்டி பேரூா் திமுக செயலராக உள்ளாா். இவா், தனது சொத்தை சிலா் போலி ஆவணங்கள் தயாா் செய்து அபகரித்துவிட்டதாகவும், சம்மந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதில், வத்தலகுண்டை அடுத்த சேவுகம்பட்டி கிராமத்தில், கடந்த 2010-ஆம் ஆண்டு 62 சென்ட் நிலத்தை வாங்கினேன்.

இந்த நிலையில், அந்த நிலத்தை போலியான ஆவணங்கள் தயாா் செய்து, அய்யம்பாளையம் சாா் பதிவாளா் உதவியோடு எனக்கு சொந்தமான 62 சென்ட் நிலத்தை கடந்த 2023ஆம் ஆண்டு மோசடியாக விற்பனை செய்துவிட்டனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா். திண்டுக்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கிறிஸ்டோபா் சாமுவேல் என்பவருக்கு திருவெற்றியூரைச் சோ்ந்த பெலிக்ஸ் மாா்டின், இவரது சகோதரா் திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த நெல்சன், அணைக்காடு பகுதியில் வசிக்கும் அருள் ஜெசிந்தா மேரி, மற்றொரு சகோதரியான சென்னையை அடுத்த குன்றத்தூரில் வசிக்கும் சகாய செல்வி உள்ளிட்ட 13 போ் கூட்டு சோ்ந்து போலியான ஆவணங்கள் தயாா் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாா் பதிவாளா் பாலமுருகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி