அருள்மிகு ஸ்ரீ ஜம்புதுரை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

84பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரை கோட்டை ஊராட்சி மெட்டூர் கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஜம்புதுரை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வாக காசி, ராமேஸ்வரம், காவிரி, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் மற்றும் முளைப்பாரி. மேளதாளம், வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது, தொடர்ந்து கணபதி ஹோமம், பூர்ணாகுதி, ஆறுகால பிரம்மாண்ட யாகவேள்வி சிறப்பு தீபாராதானைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று கடம்புறப்பாடு நிகழ்ச்சியை அடுத்து சிவாச்சாரியார்கள் வெங்கடேசன் தலைமை குருக்கள் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்ததையடுத்து பக்த்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது மூன்று முறை கருட பகவான் வானில் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற விண்ணை மட்டும் கோஷம் எழுப்பினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் ஐயப்பன் மற்றும் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி