திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டியில் அமைந்திருக்கும் சமுதாயக்கூடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சமுதாயக்கூடம் ஆங்காங்கே பெயந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சில மாதங்களாக இங்கே மக்கள் சுப காரியங்கள் எதுவும் வைக்க முடியாது சூழுல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிய சமுதாயக்கூடம் கட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.