கடந்த 23 ஆம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு திட்டம் மற்றும் நிதி ஒதுக்காததையும் கண்டித்து நத்தம் செந்துறை அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் தெய்வக் குழந்தைகள் என சொல்லிவிட்டு மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் விதமாக அவர்களுக்கென எந்த ஒரு திட்டத்தையோ நிதியையோ ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.