நத்தம் அருகே பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்தினர்

53பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கவரயபட்டி கிராமத்தில் மா, தென்னை, புளி அதிகளவு விவசாயம் செய்யப்படுகிறது இப்பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகவும் இருந்து வருகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அவை கொண்டு செல்லப்படுகின்றன.
இக்கிராமத்தில் தமிழ் புத்தாண்டான சித்திரை 1ஆம் தேதி விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்டுதோறும் முத்தாலம்மன் கோவில் முன்பாக கிராம மக்கள் சார்பாக பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு இன்று காலை 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடினர் கோவில் முன்பாக உள்ள மந்தையில் பெண்கள் பொங்கல் வைத்தனர் பின்பு பல வகையான காய்கறிகளை படையல் வைத்து விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி