மதுரை மாவட்டம் அழகர்கோவில்- நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 25). இவரது மனைவி சிட்டம்மாள் (21). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கடந்த 18-ஆம் தேதி மாலை நத்தம் அருகே கொரசின்னம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நத்தம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அவர்கள் ஓட்டி சென்ற
இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர். பின்னர் அவர்களை மிரட்டிய இருவரும் சிட்டம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கலி பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸில் ராமர் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் காவல் ஆய்வாளர்
தங்கமுனியசாமி
தலைமையிலான போலீஸார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா
காட்சிகளை வைத்து அவர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனதத்தை போலீஸார் ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுபட்டது 2 மதுரை அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த சேதுபதி (23), மதுரை புதூரை சேர்ந்த 17-வயது சிறுவன் என்பதும் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரையில் உள்ள சேதுபதியின் மாமனார் வீட்டில் பதுங்கி இருந்த 2 பேரையும் வியாழன்கிழமை இரவு போலீஸார் கைது செய்து சேதுபதியை நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.