த. வெ. க கொடி பயன்படுத்தாமல் கோட் பட வெளியீடு கொண்டாட்டம்

58பார்த்தது
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கி உள்ளதாக கூறிய நிலையில் கடந்த மாதம் கட்சி கொடி மற்றும் பாடலை வெளியிட்டார்.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் 68வது படமாக கோட் திரைப்படம் இன்று வெளியானது.

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள 4 திரையரங்குகள் உட்பட திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல திரையரங்குகளில் கோட் திரைப்படம் வெளியானது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இந்த நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள நான்கு திரையரங்குகளிலும் புதன்கிழமை இரவு 12. 50க்கு படத்திற்கான டிக்கெட் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு இரவோடு இரவாக டிக்கெட் விற்பனை நடந்து முடிந்தது.

இந்த நிலையில், ரசிகர்கள் பலர் டிக்கெட் வாங்குவதற்காக திரையரங்கு வெளியில் காத்திருந்தனர் டிக்கெட்டின் விலை பிளாக்கில் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பயன்படுத்தக் கூடாது என்று கூறிய நிலையில் எந்த இடத்திலும் கொடி பயன்படுத்தப்படவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி