ரயில் நிலைய பயணிகள் மீது தொடர் தாக்குதல்

50பார்த்தது
ரயில் நிலைய பயணிகள் மீது தொடர் தாக்குதல்
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டியைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் உத்தமராஜா (44), திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்துக்காக நாகல்நகா் வட்டசாலை நோக்கி வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் நடந்து சென்றாா். மேம்பாலத்தின் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், அவரை தாக்கி கைப்பேசி, பணம், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை பறித்தனா். மேலும், அவா்களின் தாக்குதலில் இருந்து ரத்த காயங்களுடன் தப்பிய உத்தமராஜா, ரயில் நிலையம் முன் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநா்களின் உதவியை நாடினாா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள், கடைக்காரா்கள் ஆகியோரையும், மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டினா். அதே நேரத்தில் நடந்து வந்த மற்றொரு பயணி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வருவதற்குள், இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுதொடா்பாக ரயில் நிலைய பகுதியில் உணவகம் நடத்தி வரும் விஜயகுமாா் கூறியதாவது: இரவு நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. நாகல் நகரிலிருந்து மேம்பாலம் வழியாக வரும் பயணிகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி, பொருள்களை மா்ம நபா்கள் பறித்துச் செல்கின்றனா். என்றாா் அவா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி