ரெட்டியார்சத்திரம்: 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

53பார்த்தது
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி சிறப்புரையாற்றானர்கள். இதில் 116 மகளிர் சுய உதவி குழு கடன் ரூபாய் 9. 33 கோடி, கே சி சி பயிர் கடன் ரூபாய் 26. 71கோடி, கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடன் ரூபாய் 1. 87 கோடி, மத்திய கூட்டுறவு வங்கிகள் கிளை வழியாக மகளிர் சுய உதவி குழு கடன் 76 குழுக்களுக்கு ரூபாய் 5. 55 கோடி மற்றும் மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், சிறு வணிக கடன், நாட்டுப்புற கலைஞர்கள் கடன் என 4636 பயனாளிகளுக்கு 44. 53 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி