பறக்கும்படையினரின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

74பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தமிழகத்தில் 19. 04. 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தற்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர் பெயர் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணி இன்று(10. 04. 2024) தொடங்கி இரண்டு நாட்கள் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் முன்னிலையில் உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களில் செய்யப்படும் அனைத்து முத்திரைகளிலும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர் அல்லது முகவர்களின் கையொப்பம் இடம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள், ஆத்துாரில் இருந்து நிலக்கோட்டை செல்லும் வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படையினரின் பணிகளை பார்வையிட்டு, அவர்களுக்கான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி