ஐ. பெரியசாமியிடம் ஆசீர்வாதம் பெறச் சொன்ன சீனிவாசன்

6037பார்த்தது
திண்டுக்கல்லில் புகழ் பெற்ற 333 ஆண்டுகள் பழமை வாழ்ந்த பாஸ்கு திருவிழாவானது நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழாவானது ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்த தேர் பவனி விழாவில் பங்கேற்க ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவரது மகன் ஐ. பி. செந்தில்குமார் எம்எல்ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் திமுக கட்சி நிர்வாகிகள் ஆலயத்தில் காத்திருந்தனர்.

அப்போது அதே தேர் பவனி விழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ் டி பி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனின் மகன்களான ராஜமோகன் மற்றும் இளைய மகன் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர் பெருமக்களும் வேட்பாளர்களும் ஒருவருக்கொருவர் மரியாதை நிமித்தமாக கை கொடுத்து நலம் விசாரித்து கொண்டனர். பின்பு தனது மகன் சதீஷை திண்டுக்கல் சீனிவாசனை, பெரியசாமி அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள் எனக் கூற, தனது இளைய மகனான சதீஷ் ஐ. பெரியசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். திமுக, அதிமுக இரு கட்சிகளின் பிரதான எதிரியாக கருதப்படும் பாரதிய ஜனதா திண்டுக்கல் சி. சீனிவாசன் கேட்டறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி