உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை

73பார்த்தது
உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை
ஐஸ்கிரீம் வகைகளில் நைட்ரஜன் வாயு பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நைட்ரஜன் கலந்த ஐஸ்கிரீம், ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யப்படுவதையும், விழாக்களில் இலவசமாக விநியோகிக்கப்படுவதையும் கண்காணிக்கும் பணியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

உணவு பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோா் திண்டுக்கல் நகா், புகா், கன்னிவாடி, வத்தலகுண்டு பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளிலும், ஐஸ்கிரீம் தயாரிப்புக் கூடங்களிலும் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். உணவுப் பொருள்களில் நைட்ரஜன் வாயு பயன்படுத்துவது முற்றிலும் ஆபத்தானது. மீறி பயன்படுத்தப்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தொடர்புடைய செய்தி