வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள்

69பார்த்தது
நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் துவங்கியது. கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு வாக்குபதிவு இயந்திரங்களை குதிரைகள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு.

நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு பிரச்சாரங்கள் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றதையடுத்து நாளை காலை ஏழு மணிக்கு பதிவு நடைபெற உள்ளது. இதனை அடுத்து வியாழக்கிழமை காலை 9. 30 மணியளவில் பழனி சட்டமன்ற பகுதிக்குட்பட்ட வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் சரவணன் மற்றும் தாசில்தார் சக்திவேலன் தலைமையில் பழனி மற்றும் கொடைக்கானலில் உள்ள 323 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்ப படுகிறது.

இதில் கொடைக்கானலில் உள்ள மலை கிராமங்களான வெள்ளகவி , சின்னூர் , பெரியூர் பகுதிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொடைக்கானல் கொண்டு செல்லபட்டு அங்கிருந்து குதிரை மூலம் அனுப்பபடுகிறது. தேர்தல் பணிகளில் 1596 அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி