திடீர் புயல் காற்றால் வாழை மரங்கள் சேதம்

58பார்த்தது
திடீர் புயல் காற்றால் வாழை மரங்கள் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூக உள்ள கோனூர், சிந்தலகுண்டு, அனுமதராயன்கோட்டை, சாமியார் பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தற்போது வாழை விவசாயம் செய்து வருகின்றனர். செவ்வாழை, ரஸ்தாலி, கற்பூரவள்ளி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. வாழை‌ விவசாயம் கடந்த ஒரு வருட பயிராக உள்ளது. தற்போது போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் குடும்பத்துடன் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சூறாவளி காற்றால் சிந்தலகுண்டு பகுதியில் உள்ள முருகேசன் தோட்டத்தில் மட்டும் சுமார் 500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

இதில் 300 கற்பூரவல்லி 200 செவ்வாழை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் சாய்ந்ததால் ஒரு வருடமாக வளர்த்து வந்த மரங்கள் தங்கள் கண்முன்னே சாய்ந்தது 5 லட்சத்திற்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதேபோல் அனுமதராயன் கோட்டையில் இன்பா என்பவரின் விவசாய நிலத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தது. இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகளின் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்த கடனை எப்படி கட்டுவது தங்களது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என சோகத்தில் விவசாயிகள் உள்ளனர் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி