சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

79பார்த்தது
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் வடக்கு தெற்கு ஒன்றிய திமுக மற்றும் அகரம் தாடிக்கொம்பு பேரூர் கழக திமுக சார்பில் உறுப்பினர்கள் பொதுக்கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் தலைமையில் நேற்று(செப்.6) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை வீடு தோறும் சென்று எடுத்துரைப்பது என்றும் முதல்வரின் உத்தரவின் படி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி கட்சியினரின் செயல்பாடுகள் ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேண்டுமென தீர்மானம் வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை வரவேற்புரை நிகழ்த்தினர். ஒன்றிய குழு தலைவர் ராஜா பேரூர் கழகச் செயலாளர் ராமலிங்க சாமி பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி ஒன்றிய குழு துணை தலைவர் சோபியா ராணி பாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி