திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த, வத்தலகுண்டு சாலை வீரசிக்கம்பட்டி அருகே உள்ள கம்பெனியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து செம்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில், அப்பகுதி இளைஞர்கள் மூலம் விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், செம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், செம்பட்டி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் போடிகாமன்வாடி சுடுகாடு ஓடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, அஷ்சயதாஸ் வயது 30 குணகுமார் வயது 24 சுதிர்தாஸ் வயது 25 ஆகிய 3 பேர் கைது செய்து அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், ஆத்தூர் பிரிவு அருகே கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, விஜயகுமார் வயது 22, காமேஸ்வரன் வயது 22, முத்துக்குமார் வயது 25, ரஞ்சித்குமார் வயது 30, முனியாண்டி வயது 35 ஆகிய 5 பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.