213 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வேன் பறிமுதல்

76பார்த்தது
213 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வேன் பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா போலீசார் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாமியார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாமியார்பட்டி அருகே தகர செட் அமைத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த போஸ் உள்பட 7 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 213 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வேன், 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சிவா (33) என்பவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தலைமறைவு குற்றவாளி சிவாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்பல்புரா மாவட்டம் கவுரிபிதானுர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சிவா பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் சிவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி