முதல் மாநில மாநாடு முடிந்த பிறகு தவெக கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துமாறு கட்சியினருக்கு தலைமை சில வேலைகளை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்கள் குறித்து முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.