ஒகேனக்கல் 1, 52, 000 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

50பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதை எடுத்து உபரி நீர் ஒகேனக்கல் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலை 6 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 8 மணி நிலவரப்படி 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலை 6. 00 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் மக்களுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி