தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

69பார்த்தது
தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
மும்பை துறைமுகத்தில் கடந்த 1944ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, வெடி பொருட்கள் ஏற்றி நிறுத்தி வைத்திருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மக்கள் பலர் உயிரிழந்தனர். மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழிந்து போனது. அதில் தீயணைக்கும் பணியில்ஈடுபட்டிருந்த தீயணைப் புத் துறையை சேர்ந்த 66 பேர் மரணமடைந்தனர். தீயணைக்கும் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி, அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில், பொறுப்பு அலுவலர் செந்தில் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து தொடர்ந்து இறந்தவர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி