தர்மபுரி: ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகளை எம்பி ஆய்வு

84பார்த்தது
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகளை நவம்பர் 21, இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி மற்றும் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி