தர்மபுரி: வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த எம்எல்ஏ

71பார்த்தது
தர்மபுரி: வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த எம்எல்ஏ
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, தென்கரைகோட்டை ஊராட்சி பகுதியில், ரூ. 8. இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு (RO) நிலையத்தை, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து வெங்கட சமுத்திரம் ஊராட்சி, அண்ணாநகரில் ரூ. 33. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை கொண்ட பணியை, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி பூமி பூஜை வைத்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துவக்கி செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற ஒன்றிய செயலாளர்கள் பெரியக்கண்ணு ஆகியோர் விஸ்வநாதன், கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி