தர்மபுரி: வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி தீ விபத்து

69பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி அருகே திப்பிரெட்டிஹள்ளியில் இன்று ஏப்ரல் 10 வைக்கோல் ஏற்றி வந்த லாரி ஒன்று மின்கம்பி உரசியதில் திடீரென தீ பிடித்து பற்றி எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர் கார்திகேயன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உடனே அருகாமையில் இருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைக்கு தெற்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி