பாப்பிரெட்டிப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

64பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத நத்தம் கிராமத்தில் வெள்ளாடுகள் வளர்க்கும் நவீன தொழில்நுட்ப பண்ணை மற்றும் பூத நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் வருகை குறித்த பதிவேடுகள் பிரசவ அறை, மருந்துகள் இருப்பு உள்ளிட்டவற்றையும் மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மெனசி கிராமத்தில் இருளர் காலணியில் பி எம் ஜென்மன் திட்டத்தின் கீழ் நாலு லட்சத்து 80 ஆயிரத்து 540 மதிப்பெட்டில் 9 வீடுகள் என 43 லட்சத்தை 24 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும் மற்றும் மெனசி பொதுநல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் இளவரசன் வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி