வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

65பார்த்தது
பழைய தர்மபுரியைச் சேர்ந்தவர் சுரேஷ் தனியார் நிறு வன ஊழியர். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். நேற்று முன்தினம், சுரேஷ் வீட்டை பூட்டி வழக்கம் போல் பணிக்கு சென்றார். பணி முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப் பட்டு திறந்து கிடந்தது.

அதிர்ச்சியடைந்த சுரேஷ், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வரு கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி