+2, ITI மற்றும் Degree படித்தவர்கள் NEEDS திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். விண்ணப்பதாரர் 21 வயதில் இருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ரூ. 75 லட்சம் வரை மானியம் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. மேலும், இத்திட்டத்தில் பொது பிரிவினர் தங்களது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் தங்களது திட்ட மதிப்பீட்டில் பங்காக 5 சதவீதம் செலுத்த வேண்டும்.