திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது. தொடர்ந்து, நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், அரோகரா முழக்கமிட்டு சங்கொலி முழங்கச் சிவன் பாடல்கள் பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.