தர்மபுரி மாவட்டம், ஏ. பள்ளிப்பட்டி அடுத்த அதிகா ரப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில், சுமார் 35வயது மதிக்கதக்க வாலிபரின் சடலம் மிதந்தது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஏ. பள்ளிப்பட்டி போலீசார், வாலிபரின் சடலத்தை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, சடலமாக மீட்கப்பட்டவர் யார்? , அவரை யாரேனும் கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றன ரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் மாய மானவர்கள் பற்றி புகார் இருந்தால், தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.