உடல் உறுப்பு தானம் செய்த வாலிபர்

76பார்த்தது
உடல் உறுப்பு தானம் செய்த வாலிபர்
தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனடிப்படையில் கலைஞரின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தர்மபுரி மாவட்ட அமைப்புச் செயலாளர் வே ராகவன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு உடல் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தினைஅரசு மருத்துவமனை நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து வழங்கினர் தங்கள் இறப்புக்கு பிறகு தங்கள் உடலை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்வதாகவும் இதற்கான உறுதிமொழி பத்திரத்தை வழங்கி உள்ளதாக தெரிவித்தனர் இதனை பெற்றுக் கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடல்தானம் செய்த அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர் மேலும் உடல் தானம் செய்வதற்கான சான்றிதழ்களையும் அவர்கள் வழங்கினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி