வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 10 கி.மீ வேகத்தில் நகரும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, 30-ம் தேதி காலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கரையை கடக்கும் சமயத்தில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது