காரிமங்கலத்தில் 8 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை

58பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகலில் தேங்காய் விற்பனைக்காக பிரத்தியேகமாக வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நேற்று பிற்பகல் தேங்காய் வாரச் சந்தை கூடியது தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள் இருந்தும் தேங்காய் விலை விற்க மற்றும் வாங்குவதற்காக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர் நேற்று ரகம் மற்றும் அளவைப் பொறுத்து எட்டு ரூபாய் முதல் 11 ரூபாய் வரையில் தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டது மேலும் நேற்று ஒரே நாளில் 8 லட்ச ரூபாய்க்கு தேங்காய்கள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி