பாலக்கோடு அருகே சிங்கோரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் இன்று செப்டம்பர் 25, அளித்த மனுவில் கூறியிருப்பதாவது தர்மபுரியில் இருந்து பெங்களூருவிற்கு புதிய நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக, சிருங்கேரியில் உள்ள எங்க
ளது நிலம், கடந்த 2020ம் ஆண்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தால் கையகப்படுத்தப் பட்டது. விவசாயி சின்னச் சாமியின் நிலத்தில் 5500 மல்பெரி செடி பயிரிட்டு இருந்தேன். இதற்கு பென் னாகரம் பட்டு வளர்ப்பு உதவி இயக்குனர் ஆய்வு செய்து இழப்பீடு தொகை கணக்கிடப்பட்டது. இழப்பீடு தருவதாக கூறி கைய கப்படுத்தி, 95 சதவீதம் சாலை அமைக்கப்பட்டு விட்டது.
சுமார் 3 ஆண்டு ஆகியும், இன்னும் எங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. இதே போல், வேல்முருகன் என்ற விவ சாயியின் நிலத்திற்கும் இதுவரை இழப்பீடு வழங் கப்படவில்லை. வாழ்வா தாரம் இன்றி தவிக்கும் எங்களுக்கு, இழப்பீட்டு தொகையே வாழ்வா தாரம் ஆகும். எனவே, எங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.