இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை விரும்பி சாப்பிடுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிக இறைச்சி உட்கொள்ளும் மாநிலமாக நாகாலாந்து (99.8 சதவீதம்) உள்ளது. இரண்டாமிடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. அங்கு 99.3 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகின்றனர். மூன்றாமிடத்தில் கேரளா (99.1 சதவீதம்) உள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் (97.65 சதவீதம்) உள்ளது.